Mar 03

மொழி ஆற்றலும் பிள்ளையின் வளர்ச்சிக் கட்டங்களும்

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே மொழியைப் பேசுவதற்கு அத்தியவசியமான புலங்களின் வளர்ச்சி ஆரம்பமாகின்றது. பிறக்கும் போது அப் புலன்களின் ஆயத்த நிலை பூரணம் அடைந்திருக்கும். பிறந்தவுடன் குழந்தை அழுவதற்கு துவங்குவதுடன் அப்போதிருந்தே சத்தத்தை வெளிக்காட்டப் பழகுகிறது. குழந்தைப் பருவத்தில் எழுப்பும் வித்தியாசமான சத்தங்கள் அவர்களது எதிர்கால பேச்சுத் திறனை ஏற்படுத்த உதவும். இது தொண்டை ,நாக்கு, தாடை போன்றவற்றின் தசை நார்களின் வளர்ச்சிக்கு உதவும்.

குழந்தைப் பருவத்தில் பிள்ளை எழுப்பும் சத்தத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு மொழிகளிலும் மொழியின் ஆரம்ப சத்தங்களுக்கிடையே தொடர்பை காண முடியும். இருப்பினும் சிறிது காலம் சென்றதும் பிள்ளையின் சத்தம் எழுப்பும் திறன் தாய் மொழிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கும்.

இதற்குரிய காரணம் குழந்தை சிறிது சிறிதாக தமது பெற்றோர்களும் சகோதரர்களும் எழுப்பும் ஓசையை பின்பற்றுவதாகும். முதியோர் குழந்தை பின்பற்றக் கூடிய ஒரு மாதிரியாக செயல்படுவதுடன் குழந்தையின் பல்வேறு சத்தங்களை மீல வலியுறுத்தக் கூடியவர்களாயும் செயற்படுகின்றனர்.

சில குழந்தைகள் 9 மாதம் ஆகும் பொழுது சில சொற்களை உச்சரிக்கும் திறன் பெறும். சொற்களஞ்சியம் மிக மெதுவாகவே கட்டியெழுப்பப் பட்டாலும் 15-18 மாதங்கள் ஆகும.; பொழுது மொழி வளர்ச்சி விரைவாக நடைபெறும். பிள்ளை சுருக்கமாக மொழியைப் பாவித்து கதைப்பதை ஆரம்பிக்கும.; அம் மொழி தந்திக்கு பயன்படும் சொற்களைப் போல் இருக்கும். ஒரு சொல்லில் பல்வேறு கருத்துக்களை முன்வைப்பது சுருக்க மொழியின் இயல்பாகும். உதாரணமாக குழந்தை “காய்” என்ற சொல்லை தான் விரும்பி உண்ணும் எல்லா பொருட்களுக்கும் பாவிப்பதுடன் அதனை தரும்படி கேட்பதற்கும் அச் சொல்லையே பாவிக்கின்றது.

மொழயில் காணப்படும் இலக்கண விதிகளை பிள்ளைகள் எவ்வாறு கற்கின்றனர் என்பதும் உளவியலாளர் கவனத்தை ஈர்த்துள்ளது. நடத்தை வாதிகள் குறிப்பாக ஸ்கினர் பிள்ளையின் பிழையற்ற உச்சரிப்பு சரியான சொற்பிரயோகம் என்பன பின்பற்றல் மூலம் பாவனை செய்யப்படுவதாக குறிப்பிடுகின்றார். அதே போல் சொற்களின் பொருளை தெளிவாக விளங்கிக் கொள்வது பழைய நிபந்தனைப் பாட்டு முயைறின் கோட்பாடுகளுக்கு இணங்கவாகும் என உளவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சொற்களுக்கு பொருள் வருவது இம் முறையிலாகும்.

மொழியைப் பயன்படுத்தும் இயல்பான ஓர் ஆற்றல் குழந்தைகளிடம் இருப்பதாக மொழியியல் நிபுணர்கள் நம்புகின்றனர். ஒரு காலத்தில் பெற்றோர்களின் முன்மாதிரி தூண்டல் வழிகாட்டல் என்பவற்றின் மூலம் பிள்ளையின் மொழியாற்றல் வளர்வதாக நம்புகின்றனர். பெற்றோர்களுக்கு, பிள்ளைகளுக்கு வழிகாட்ட அல்லது மொழித்திருத்தம் செய்வதற்கு ஓர் ஆய்வு நேரம் அல்லது சந்தர்ப்பம் இல்லை என ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. “டோம்ஸ்கி” போன்ற மொழியியல் விஞ்ஞானிகள் மொழி இயல்பான ஆற்றல்களால் கிரகித்துக் கொள்ளப்படுகின்றது என குறிப்பிடுகின்றனர். எல்லா மொழிகளுக்கும் ஒரு பொதுவான அமைப்பு(இலக்கணம்) இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆகவே எல்லா மொழிகளுக்கும் பொதுவான வரையறைகள் (சட்டதிட்டங்கள்) கண்டறிவதற்கு இவர்கள் முயன்றுள்ளனர்.

புpள்ளைகள் சொற்களின் பொருளை விளங்கிக் கொள்வது சொல்லுக்கும் அதனுடன் தொடர்புடையவைகளுக்கும் இடையே நிபந்தனைப்பட்ட தொடர்புகளை கட்டியெழுப்புவதன் மூலமாகும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்துடன் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதாகும். உதாரணமாக இங்கு ஓடு என்ற சொல்லை எடுத்து நோக்கும் போது பல பொருள்களில் வருவதை நாம் காணலாம். முதலாவதாக பசு கன்றோடு வந்தது, இரண்டாவதாக கூரையிலிருந்து ஓடு விழுந்தது. இவ் வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு பிள்ளை உடல் ரீதியிலும் உள ரீதியிலும் வளர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.