Mar 22

சிரியாவில் பாடசாலை மீது வான் தாக்குதல்; தங்கியிருந்த 33 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின்  கட்டுப்பாட்டிலுள்ள ரக்கா நகரின் மேற்கே  ஒரு கிராமத்திலுள்ள பாடசாலையொன்றின் மீது   நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 33  பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.

அல் மன்சூரா பிராந்தியத்திலுள்ள அந்தப் பாடசாலைக் கட்டடமானது இடம்பெயர்ந்த மக்களால் தங்குமிடமாக  பயன்படுத்தப்பட்டு   வந்துள்ளது.அங்கு தங்கியிருந்த சுமார் 50  குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்பது அறியப்படவில்லை.

வான் தாக்குதலால் இடிந்து விழுந்த பாடசாலைட கட்டடத்தின் இடிபாடுகளின் கீழிருந்து  இதுவரை இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி  தாக்குதலானது  அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படையினரால் நடத்தப்பட்டதாக  சிரிய மனித உரிமைகள் நிலையமும்  ரக்கா சத்தமின்றி படுகொலை செய்யப்படுகிறது என அழைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவும் தெரிவிக்கின்றன.