Jul 02

மனிட்டோபா மாகாணத்தினுள் பிரவேசிக்கும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனேடியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட தரவுகளின் படி மனிட்டோபா மாகாணத்தினுள் பிரவேசிக்கும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் , மே மாதங்களில்  வீழ்ச்சிகண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வருடம் மே மாதத்தில் சட்டபூர்வமான எல்லை கடக்கும் நிலைகளுக்கிடையில் 106 பேர் கனடாவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தனர்.

இவ்வருட மார்ச் மாதத்தில் 170 பேரும் , ஏப்ரல் மாதத்தில் 146 பேரும் கனேடிய எல்லைக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக கனடாவினுள் பிரவேசிக்கும் அகதிகளின் எண்ணிக்கை கோடை காலத்தில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஆயினும் இதற்கெதிரான வகையில் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.