Jul 02

அகதிக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் காலம் 11 வருடங்கள் ஆகலாம்

அதிகரிக்கும் அகதிக்கோரிக்கைகளின் எண்ணிக்கை காரணமாக அவை பரிசீலிக்கப்பட எடுக்கும் காலம் 11 வருடங்கள் வரை ஆகலாம் எனவும், இவ்வாறு கோரிக்கைகள் பரிசீலிக்கப்டும் வரை  அகதிக் கோரிக்கையாளர்களுக்கு உதவித்தொகை, சமூகநலக் கொடுப்பனவு ஆகியவற்றை வழங்கும் செலவாக $2.97 பில்லியன் அளவான தொகை செலவாகலாம் எனவும் அரசின் உள்ளக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


தற்போது தேக்கத்தில் உள்ள அகதிக்கோரிக்கைகளை துரிதகதியில் பரிசீலித்து முடிப்பதற்காக அகதிகள் மற்றும் குடிவரவுச்சபை முயற்சிகள் எடுத்த போதும், அதற்காக கடந்த வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்பட இல்லை.


2017 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற அகதி விண்ணப்பங்களிண் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக உள்ளதால்,  அகதிகள் மற்றும் குடிவரவுச்சபையால் இவற்றைக் கையாள முடியாத நிலை காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன், இந்நிலைமை தொடர்பாக ஆராய மூன்றாம் தரப்பு மறுசீராய்வு ஒன்று நடாத்தப்பட உள்ளதாகவும், இம் மறுசீராய்வின் மூலம் அகதிகள் மற்றும் குடிவரவுச்சபையில் உள்ள வளப் பற்றாக்குறைகள், அச்சபையினால் கையாளப்படும் பொறிமுறைகள் போன்றன தொடர்பாகவும் ஆராய உள்ளதாகவும் தெரிவித்தார்.