Jul 02

ரணிலின் கைக்கூலி சுமந்திரனை கட்சியிலிருந்தும் எம்பிப் பதவியிலிருந்தும் நீக்குக

சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் அளித்துள்ள நேர்காணலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும். விக்கினேஸ்ரனின் நிலைப்பாடு நாட்டு நலனுக்கு எதிரானதும், இன ஐக்கியத்திற்கு முரணாணதுமாகும் எனவே அவரைப் பதவிவிலக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

சுமந்திரனின் இந்த கூற்றிற்குப் பின்னால் தமிழருக்கு எதிரான ஒரு சதி உள்ளது. அதாவது தமிழ்மக்களுக்கான அரசியற் தீர்வற்ற, அர்த்தமற்ற, ஏமாற்று கரமான ஓர் அரசியல் யாப்பை சில மாதங்களுக்குள் அரசாங்கம் நிறைவேற்றத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.  

இதற்குத் தமிழ்த்தலைவர்களினதும், தலைவர்களினதும் அர்த்தமுள்ள எதிர்ப்புக் கிடைத்தால் அதனை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது. இந்த ஏமாற்று கரமான தமிழ்மக்களுக்கு எதிரான அநியாயத்தை எதிர்க்கக் கூடிய ஆளுமை உள்ளவராக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், எதிர்க்கக்கூடிய வல்லமை உள்ளதாக வடமாகாணசபையுமே உள்ளன.

ஆதலால் முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி வடமாகாணசபையை தமக்குச் சாதாகமான கைப்பொம்மைகள் மூலம் செயற்படுத்தும் தந்திரத்தை அரசாங்கமும். சுமந்திரனும் சேர்ந்து வகுத்துள்ளனர்.
இதன்பொருட்டு முதல்க்கட்டமாக முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்க எடுத்த சதி மக்கள் எழுச்சியினால் தோல்வியில் முடிந்துவிட்டது.

ஆனால் இப்போது சிங்களப்பத்திரிகையில் சுமந்திரன் அளித்த பேட்டியில் முதலமைச்சர் தனக்கு மக்கள் பலம் இருக்கு என்று கூறுவாரானல் தைரியமிருந்தால் பதவியை விட்டு விலிகி தேர்தலில் நின்று வென்று காட்டட்டடும் என்றார். இது முதலமைச்சரைச் சீண்டி அவருக்கு ரோசத்தை ஏற்படுத்தி  பதவிலியிருந்து விலக்க வைக்கும் ஒரு சதிகார எண்ணமாகும். அப்படி அவர் பதவி விலகி மாகாண சபை கலைக்கப்பட்டால் இந்த ஆட்சியாளர்கள் தமக்கு வசதியான காலம் வரையும் தேர்தலை வைக்க மாட்டார்கள்

புதிய அரசியல் யாப்புத்திட்டத்திற்கு 13 வது சீர்திருத்தச்சடடடத்தின் படி மாகாண சபையின் அனுமதியும் தேவைப்படுகிறது. முதலமைச்சர் இல்லைஎன்றால் ஆளுநர் அதற்கு கையெழுத்திட்டடு அனுமதியளிக்க வழியுண்டு

தமிழ்த்தேசிய நலனிலிருந்து நான் சிறிதும் விலகமாட்டேன் என்று அண்மையில் பேட்டியளித்துள்ள விக்கினேஸ்வரன் தமிழ்மக்களுக்கு பாதகமுள்ள அரசியல் யாப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதால் சுமந்திரன், சம்பந்தன், சேனாதி, சிறீதரன் உட்பட்ட தீய சக்திகள் முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்க முயற்சிக்கின்றன.

உண்மையில் சுமந்திரனைத்தான் இதற்கு ஓர் ஆப்பாக ரணில் பயன்படுத்துகிறான். எனவே முதலில் அந்த ஆப்பான சுமந்திரனை கட்சியிலிருந்தும். பதவியிலிருந்தும் தூக்கி வீசிவிட்டால் தமிழருக்கு எதிரான சதி நிறைவேற வாய்ப்பில்லை.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிழந்தால் தேர்தலின்றி கட்சியால் அந்த இடத்திற்கு ஒருவரை நியமிக்க முடியும். எனவே கைக்கூலியாகவும், ஆப்பாகவும் செயற்படும் சுமந்திரனை கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் எம்பி பதவியிலிருந்து  நீக்கவேண்டும்.

அளப்பெரும் தியாகத்தையும் சிந்திய இரத்தத்தையும், விலைபேசும், கேலிக்குள்ளாக்கும் தீய சக்திகளை முற்றிலும் புறக்கணிப்பதாக சபதமெடுப்போம்.