Mar 22

செலவு குறைவான நகரங்களில் சென்னை 6ஆவது இடம்

உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகனாமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு பட்டியல் வெளியிடும். அந்த பட்டியலில் இந்தாண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பெங்களூர் 3ஆவது இடத்தையும், சென்னை 6ஆவது இடத்தையும், மும்பை 7ஆவது இடத்தையும், டில்லி 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அல்மாட்டி இடம்பிடித்துள்ளது.