Jul 01

கிரென்பெல் கட்டட விவகாரம்: உள்ளூர் கவுன்சிலின் தலைவர் பதவி விலகல்

லண்டன் கிரென்பெல் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய உள்ளூர் கவுன்சிலின் தலைவர் பிரவுன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தீ பரவிய விவகாரம் தொடர்பான விடயங்களை கையாளும் முறை குறித்து பலர் விமர்சனம் தெரிவித்ததைத் தொடர்ந்தே அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கிரென்பெல் கட்டடம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தை பிரவுன் ஒத்திவைத்ததைத் தொடர்ந்தே அவர் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகினார். பிரதமர் மேயின் பேச்சாளரும் இவ்விடயம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, கிரென்பெல் கட்டடத்தில் பரவிய தீ வேகமாக பரவக் காரணம் என்ன, தீ விபத்து ஏற்படுத் சந்தர்ப்பத்தில் அதனை கட்டுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா போன்ற பல விடயங்கள் தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் சிக்கி குறைந்தது 80 பேர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.