Mar 22

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது;சித்தராமையா

உச்சநீதிமன்றத்தின்  உத்தரவின் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா மறுத்து விட்டது.

ஜூலை 11 வரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது,  தற்போது கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றார்.