Mar 22

இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகள் கிடைக்கப்பெறும்; இராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு  முன் இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படுமென்றும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி விரைவில் அளிக்கப்படுமென்றும் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.

பிரதமர் மோடி எதிர் வரும் மே மாதம், இலங்கை செல்ல உள்ளார். அதற்கு முன்பாகவே, நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்