Jul 01

கனேடியர்களின் உழைப்பே இன்றைய உயர்வுக்கான காரணம்: உயர்ஸ்தானிகர்

இனரீதியான, மதரீதியான, பால்ரீதியான புறக்கணிப்புக்களில் இருந்து விடுபட்டு இலங்கையில் தீர்வுகளுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என கனடா நம்பிக்கை வெளியிட்டுள்ளது

கனேடிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் ச்செல்லி விட்டிங் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தினத்தில் அனைத்து கனேடியர்களும் உலகத்தில் தமக்குள்ள இடம், சூழல், சாதித்தவை என்பவை தொடர்பில் மகிழ்ச்சியுடன் கனேடிய தினத்தை கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவை பொறுத்தவரை, மனித உரிமைகள் காப்பு, ஜனநாயகம் என்பவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் தமது நாடு, அரசியல், பொருளாதாரம், உயர்கலாச்சாரம் என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.

இது கனேடியர்கள், பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடும் உழைப்பின் பிரதிபலனாகும். இதற்கிடையில் விபத்துக்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றுக்கு உரிய தீர்வுகள் எட்டப்பட்டன.

இதன்காரணமாகவே இன்று கனடா உலகின் முன்னணி ஜனநாயக நாடாக திகழ்கிறது.

மேலும், இலங்கையுடன் தொடர்ந்தும் கனடா சிறந்த உறவைப்பேணி வருவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.