Feb 22

ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!

ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையாளர் பொதுஅறிக்கை தெரிவிக்கிறது.

ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் கட்டணம் கடந்த ஆண்டு குறைக்கப்பட்டமையினால், அதன் மொத்தம் வருவாயில் 5.4 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 2018 அம் ஆண்டு Metrolinx உபகரணங்கள் தவறாக பயன்படுத்தியமை காரணமாக மட்டுமே வருமானத்தில் 3.4 மில்லியன் டொலர் இழப்பைக் காட்டுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 இல் TTC மொத்த பயண வருவாய் (சக்கர ரயில் தவிர) $ 1.16 பில்லியன்களாகும். இது கடந்த 2017 இனை விட 1 மில்லியன் டொலர் குறைவு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை TTC மொத்த வருவாயில் இரண்டு ஆண்டுகளிலும் பயணிகள் வருகையின் மதிப்பீடு 95 சதவிகதமாக உள்ளமை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.