Mar 22

7 அரச சார்பற்ற நிறுவனங்கள் விவாதத்தில் உரையாற்றும்

ஐக்கியநாடுகள் மனித . உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள  இலங்கை அறிக்கை மீதானவிவாதம்  இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு    ஏழு அரச சார்பற்ற  நிறுவனங்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

19 அரச சார்பற்ற நிறுவனங்கள்   இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு அனுமதிகோரியிருந்த போதிலும்   7 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கையின் சார்பில் பல்வேறு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த சந்தர்ப்பத்தில்  உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.