Jun 30

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் – கமீலா தம்பதியர் கனடாவுக்கு விஜயம்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமாகிய கமீலா ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோக விஜயம் மேற்கொண்டு கனடாவுக்கு சென்றுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) கனடாவுக்கு விஜயம் மேற்கொண்ட குறித்த அரச தம்பதியருக்கு கனடாவில் உள்ள இன்யூவிட் (Inuit) பழங்குடி மக்கள் இனிய வரவேற்பளித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய இளவரசர் சார்ள்ஸ், “எனக்கு கனடாவுக்கு வருவதற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனெனில், இந்த கனேடிய விஜயம் எனது கடந்த கால இனிமையான நினைவுகளை மீண்டும் உயிரூட்டியுள்ளது” என தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, இன்யூவீட் பழங்குடி மக்களின் மொழியை புதுப்பிப்பது தொடர்பில் இளவரசர் சார்ள்ஸ் அக்கறை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை சீமாட்டி கமீலா அங்குள்ள பழங்குடியினப் பெண்களின் பிரச்சினைகள் குறித்து உற்;று நோக்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தம்பதியர் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவுக்கும் விஜயம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.