Mar 22

இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் உறுப்பினர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை ஆயுதத்தால் தாக்கப்பட்டமை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையிலேயே மினுவாங்கொடையை வதிவிடமாகக் கொண்ட 30 வயதுடைய கோப்ரல் தர அதிகாரியான நிசாந்த சில்வா எனும் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்  செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.