Jun 30

ஸ்காபரோ மத்திய தொகுதித் தேர்தல் - தேனுசா பரணி வெற்றி பெற்றார்

கனடிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றதாகவும், பலத்த சர்ச்சைகளிற்கிடையே நடைபெற்றதாகவும் கருதப்படும் ஸ்காபரோ மத்திய தொகுதிக்கான மாகாணசபைத் தேர்தலில் தேனுசா பரணி வெற்றி பெற்றதாக சற்று முன்னர் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தேர்தலில் வாக்களிக்க வந்தோர் அனுமதிக்கப்படவில்லை, வாக்களிப்பு முடிவுகள் எண்ணப்படுவதற்கான நேரம் அறிவிக்கப்படவில்லை போன்ற காரணங்களால் கனதியான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு,

பட்டயக் கணக்காளர்களிடம் வாக்களிப்பு முடிவுகள் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி தேனுசா பரணி ஏறக்குறைய 100 வாக்குகளால் வெற்றி பெற்றார். அது கூட பலத்த கண்காணிப்புக்களிடைய இடம்பெற்ற இரண்டாவது வாக்குத் தெரிவின் பிரகாரமே இவ்வாறான வெற்றியை அவர் பெற்றார்.

இதன் மூலம் மக்களின் ஆதரவுப் பலமுள்ள ஒரு வேட்பாளராக அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பின்னரான தேர்வில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் என்ற பெருமையை மேலதிகமாகப் பெறுகின்றார்.

இதன் மூலம் ஸ்காபரோ மத்திய தொகுதிக்கான மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளராக கனடியத் தமிழரான தேனுசா பரணி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.