Mar 22

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா?; அநுர கேள்வி

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்ததை நல்லாட்சி அரசாங்கம் புதுப்பிக்குமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கேள்வி எழுப்பிய அவர்,

முன்னைய ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

யுத்த காலத்தின் போது பாதுகாப்பு காரணங்களை மையமாக கொண்டு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

எனினும் தற்போது யுத்தமில்லை. இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் செயற்பட இடமளிக்க முடியாதுஎனவே இந்த ஒப்பந்தம் இவ்வருடம் நிறைவடைகின்றது.

குறித்த ஒப்பந்ததை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிகின்றது. எனவே அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? என்றார்.