Jun 30

மிசிசாகாவில் ஒருவர் சுட்டுக் கொலை!

மிசிசாகாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

டண்டாஸ் வீதியில், வெஸட் மோலுக்கு அருகே, “Diamonds Cabaret strip club”ற்கு வெளியே நேற்று அதிகாலை 2.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோதல் ஒன்றின்போது, இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 வயது ஆண் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே குறித்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எந்தவித அசைவு இயக்கங்களும் இன்றி காணப்பட்டதாகவும், உடனடியாகவே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கே அவர் உயிரிழந்து விட்டதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், காவல்த்துறையினர் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.