Jun 30

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – முன்னாள் அமெரிக்க தூதர் சந்திப்பு

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள ரெம்லினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் ஹென்ரி கிசிங்கரை சந்தித்ததாக ரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இருவரிடையே நடந்த பேச்சுவார்த்தை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ரஷ்யாவில் நடைபெறும் ப்ரிம்கோவ் ரீடிங்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள கிசிங்கர் ரஷ்யா சென்றுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ஹென்ரி கிசிங்கர் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஜெர்மனியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டின் போது இருவரும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் நிர்வாக போக்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கிடையே நிலவும் சூழலில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கும் ஜி20 மாநாட்டில் டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையே எவ்வித சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என ரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.