Mar 22

கண்டி, மாத்தளை எம்.பி.கள் வெள்ளியன்று பிரதமர் ரணிலுடன் சந்திப்பு

மலையகத்தில் அரச பெருந்தோட்ட காணிகள் பகிர்ந்தளிப்பு தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

இந்தச் சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் மற்றும் கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ்த் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் மற்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கும் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் காசீம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது  எல்கடுவ பிளான்டேசன்;, அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, ஆகிய மூன்று கட்டமைப்புக்களின் காணிகளே பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இக்காணிகள் அபிவிருத்தியை மையப்படுத்தி பகிர்ந்தளிக்கப்படுவதனால் மலைய மக்களின் தொழிற்துறை வாழ்வாதரம் அழிக்கப்படுகின்றன. ஆகவே அது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர்களான மனோகணேசன், திகாம்பம் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து கொள்கையளவில் தாங்கள் இணங்குவதாக தெரிவித்த அமைச்சர்களான கபீர் காசிம் மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பிரதமருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தி இறுதித்தீர்மானம் ஒன்றை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.