Mar 22

நாட்டின் மொத்தக் கடன்தொகை 8503.2மில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு

நாட்டின் மொத்தக் கடன்தொகை 8503.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதுடன், இது மொத்த தேசிய வருமானத்தில் 76 வீதமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தின் கடன் தொகையானது 3230 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினர். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்காக கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித்.டி.சொய்சா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.