Mar 22

இரண்டுவருட கால அவகாசத்தை எதிர்த்து பரந்துபட்ட அறிக்கை நாளை

இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கும் வகையில்  ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை  நிறைவேற்றப்படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  புலம்பெயர் அமைப்புக்களும்  இலங்கையின் அரசியல் கட்சிகளும்   சிவில் அமைப்புக்களும் இணைந்து  அறிக்கையொன்றை நாளை  ஜெனிவாவில் வெளியிடவுள்ளன.

நாளையதினம்  இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள  பிரேரணை  நிறைவேற்றப்படவுள்ள நிலையிலேயே  இந்த அறிக்கை  வெளியிடப்படவுள்ளது.

 

அந்த வகையில்  இந்த அறிக்கையை  தயாரிப்பதற்கான முழு முயற்சியில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் அமைப்புக்களும்   தீவிரமாக ஈடுபட்டுள்ளன.