Jun 29

இணையத்தில் வைரலாக வேண்டும் என்று சீன இளைஞர் செய்த காரியம்!

சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் குடித்துள்ளார். இணையத்தில் தற்போது சீனா இளைஞரின் வீடியோ தான் ஹாட்டாக உள்ளது. அந்த இளைஞர் 5 பீர் கப்புகளில்களில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார்.

ஒவ்வொரு கிளாசிற்கும் 10 முட்டை என மொத்தம் 50 முட்டைகள். அதன் பின்னர் அதை அப்படியே அடுத்தடுத்து எடுத்து குடிக்கிறார். இதை அவர் 20 நிமிடத்திற்குள் செய்து முடித்துவிட்டார்.

இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.