Mar 22

பிரித்தானியா செல்கிறார் ரவி கருணாநாயக்க

பிரித்தானிய த பேங்கர் சஞ்சிகையின்  தரவரிசையின் படி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆசிய பசுபிக் வயத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை பெற்றுக்கொள்ள பிரித்தானியா செல்லவுள்ளாதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகையின் ஆசிய பசுபிக் வயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த  நிதி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கான விருது  வருகின்ற 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் வைத்து அவருக்கு வழங்கப்படவுள்ளது.