Feb 11

இராணுவ சக்தியை பயன்படுத்த பிரித்தானியா தயாராக வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்

பிரெக்ஸிற்றின் பின்னர் அதன் உலகளாவிய நலன்களை பாதுகாப்பதற்கு இராணுவ சக்தியை பயன்படுத்த பிரித்தானியா தயாராக இருக்க வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லயிம்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இன்று ஆற்றிய உரையொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்ஸிற் எமது வரலாற்றில் முக்கிய தருணமொன்றிற்கு எம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எனவே, உலகளாவிய ரீதியில் இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தருணத்தில் நாம் காணப்படுகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு மேலதிகமாக 1.8 பில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது