Feb 11

ரி-20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!


சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, ரி-20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வாரந்தோறும் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த வாரத்திற்கான ரி-20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 135 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா அணி 124 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 118 மதீப்பிட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து 118 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியா 117 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், விண்டிஸ் அணி 101 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 92 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், இலங்கை அணி 86 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பங்களாதேஷ் 77 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளன.