Feb 11

பிறப்பு வீதத்தை அதிகரிக்க ஹங்கேரி அரசாங்கம் நடவடிக்கை!


நாட்டின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஹங்கேரி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அந்த முயற்சியின் ஒரு அங்கமாக புதிய வரி மற்றும் கடன் சலுகைகளை ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண்களுக்கு வருமான வரி விலக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறைந்தபட்சம் இரு குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கடன் திட்டங்களை விரிவுபடுத்தவும், வீடு மற்றும் வாகனம் கொள்வனவு செய்வதற்கான மானியங்கள் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய திட்டத்தை அறிவித்து உரையாற்றிய பிரதமர், எமக்கு எண்ணிக்கை முக்கியமானதன்று. ஆனால் ஹங்கேரிய குழந்தைகள் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.