Feb 11

​தென்மேற்கு சீனாவில் பென்டா இருப்பிடத்திற்குள் வீழ்ந்த சிறுமி மீட்பு!

மிருகக்காட்சிசாலைக்கோ, விலங்குகள் காப்பகத்திற்கோ சென்றால் நமது பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தென்மேற்கு சீனாவில் சிறுமியொருவர் பென்டா கரடிகளின் இருப்பிடத்திற்குள் வீழ்ந்த நிலையில் பாதுகாப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  மீட்கப்பட்டுள்ளார்.

பென்டா கரடிகள் அவ்வளவாக ஆபத்தான விலங்காக இல்லாவிடினும் அவை குறும்புத்தனம் மிக்கவையாக இருக்கின்றன.

எனவே, தங்களின் இருப்பிடத்திற்கு அறிமுகம் இல்லாத ஒருவர் வரும் பட்சத்தில் தாக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இருந்தபோதும், குறித்த பென்டா கரடி காப்பகத்தின் பாதுகாவலர் ஒருவர் தடியொன்றைக் கொண்டு சிறுமியை மேலே தூக்குவதற்கு முயற்சிக்கிறார். முடியாத பட்சத்தில் தானே தரையில் அமர்ந்து சிறுமியின் கைகளை பற்றி மேலே இழுக்கும் காட்சி அங்கிருந்த சீ.சீ.ரி.வீ கருவியில் பதிவாகியுள்ளது.

எனினும், அங்கு கூடும் 3 பென்டாக்களும் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போதும், சிறுமியை தாக்காமல் இருந்தது தெய்வாதீனமான சம்பவம் என்றே அங்கிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

குறித்த சிறுமி காயங்கள் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக காப்பக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.