Feb 11

காதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி

காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள்வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் விற்பனையாகவுள்ள ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளது.  ஒரு ரோஜாவொன்றின் விலை 16 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது.

உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒரு ரோஜா 10 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.