Feb 11

உதயநிதியின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்


‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும்  ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கின்றார். Spence கலந்த கிரைம் திரில்லர் கதையில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.