Feb 11

ரஜினிகாந்த்தின் 166ஆவது திரைப்படத்தில் இணையும் பிரபலம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 166ஆவது திரைப்படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தளபதி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கின்றார்.

‘பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளது.