Feb 11

14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பரிசோதனை அறிக்கை வெளியாகும்!

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளியிடப்படும் என, சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரவித்துள்ளார்.

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பகுப்பாய்பு அறிக்கை தொடர்பில் ஆதவன் செய்திப்பிரிவு அவருடன் தொடர்பை ஏற்படுத்திய போதே, இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மனித புதைக்குழுயில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட குறித்த மனித எலும்புகூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது ஆய்வு அறிக்கை 14 கடமை நாட்களின் பின்னரே கிடைக்கும் என தெரிவித்திருந்தார்கள். அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும்.

குறித்த அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதி எங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆய்வறிக்கையின் பின்னரே குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்” என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.