Feb 11

தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பம்


தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த 8ஆம் திகதி, 2019-20ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.

இரண்டு நாட்கள் விடுமுறையின் பின்னர் இன்று கூடிய சட்டப்பேரவை அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது கேள்விநேர பதில்கள் வழங்கப்பட்டு வருவதுடன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இதன் பின்னர் ஒத்திவைப்பு வேளையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விவாதாம் நடத்த தீர்மானித்துள்ளன. இதனால் இன்றைய சட்டப்பேரவை அமர்வில் சூடானவிவாதங்கள் இடம்பெறலாமென்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பர். நாளை மறுதினம் வரையில் வரவு செலவுத் திட்டம் மீதான பொது விவாதங்கள் நடைபெறவுள்ளன. 13ஆம் திகதி நடைபெறும் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

இதனைத்த தொடர்ந்து 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான பொது விவாதத்திற்கு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பதில் வழங்கவுள்ளார்.