Mar 22

அமெரிக்கா விரையும் ஒன்ராரியோ அமைச்சர்கள்

அமெரிக்கத் தயாரிப்புக்களை மட்டுமே வாங்கும் கொள்கையில் இருந்து சற்றே விலகி , கனேடியப் பொருட்களையும் வாங்கும்படி கோரிக்கை விடுக்கும் நோக்குடன் ஒன்ராரியோவின் அமைச்சர்களான Brad Duguid  மற்றும் Michael Chan ஆகியோர் நியூ யோர்க் நகருக்கு விரைகின்றனர்.  

அமெரிக்காவின் “அமெரிக்க உற்பத்திகளை மட்டுமே வாங்குதல்” என்ற கொள்கையில் இருந்து கனேடிய உற்பத்திகளுக்கு விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக அவர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தில்  அமைந்துள்ள அல்பனி  என்ற நகரிற்கு செல்கின்றனர்.  அமெரிக்காவின் இத்தகைய கொள்கை கனடாவிற்கு மட்டுமன்றி  அமெரிக்காவிற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்  என அவர்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.

ஒன்ராரியோ மாகாணத்தின் வர்த்தகத்தில் 80% , நியூ யோர்க் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் மொத்தப் பெறுமதி $ 10 பில்லியன்கள் ஆகும். இதேபோல் ஒன்ராரியோ மாகாணம் , நியூ யோர்க்கிற்கு $ 12 பில்லியன்கள் மெறுமதியான ஏற்றுமதியை மேற்கொள்கிறது.