Jun 29

போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு?

Transit மற்றும் U.P. Express ஆகியவற்றின் போக்குவரத்துக் கட்டணங்களில் அதிகரிப்புகள் ஏற்படவுள்ளதாக Metrolinx நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த நிறுவனத்தின் ரொரன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களுக்கான பொறுப்பதிகாரி, இந்த கட்டண அதிகரிப்பினை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பெரியவர் ஒருவருக்கான பயணக் கட்டணங்கள் மூன்று சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் Metrolinx சபைக்கு இன்று கையளிக்கப்படும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண அதிகரிப்பானது $5.65க்கும் அதிகமான பெறுமானமுடைய பயணச் சீட்டுகளையே பாதிக்கும் எனவும், அதனை விடவும் குறைவான தொகையுடைய பயணங்களை மேற்கொள்வோருக்கு அதனால் பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

$6.75 இலிருந்து $7.05 வரையிலான பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்வோர் 20 சதம் அதிகரிப்பினை எதிர்நோக்கக்கூடும் எனவும், $8.65 செலுத்தி Oakville அல்லது Barrie பகுதிக்கு பயணிப்போர் 40 சதங்களை அதிகமாக செலுத்தவேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல யூனியன் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் இடையே Union Pearson Express மூலம் பயணிப்போர் தமது ஒவ்வொரு பயணத்திற்கும் 35 சதங்கள் வரையில் அதிகமாக செலுத்தவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருமாக இருந்தால், Union Pearson Express போக்குவரத்து சேவையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்படும் கட்டண அதிகரிப்பாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.