Mar 21

வேடிக்கை பார்க்கும் அரசு நல்லாட்சி அரசு?? கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள்

கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  138 குடும்பங்களுக்கு சொந்தமான 482ஏக்கர் நிலங்களை விடுவிக்க கோரி  பூர்வீக கிராம மக்களின் போராட்டம்  இரவுபகலாக தொடர்கின்றது.

பல இன்னல்களுக்கு மத்தியில் தாம் போராட்டத்தை தொடர்ந்து நடாத்தி செல்கின்றோம்.  ஆனால் நல்லாட்சி என்று சொல்லிகொள்ளும் அரசானது தனது சொந்த நாட்டு மக்களையே அந்த மக்களுக்கு சொந்தமான சொந்த கிராமத்திலே வீதியிலும் மாதிரிகிராம என்னும் போர்வையில் முகாமிலும் அவல வாழ்க்கை வாழ  வைத்து வேடிக்கை பார்ப்பது சரியா?   

தெற்கில் வாழும் மக்களுக்கு ஒருநீதியும் வடக்கில் வாழும் மக்களுக்கு ஒருநீதியுமென இந்த நல்லாட்சி அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது என்றும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தனர்.