Jun 29

கனடா 150 வது நாள்

கனடா உலகில் உள்ள நாடுகளில் இரண்டாவது பெரியநாடு ஆகும். இந்நாட்டு மக்கள் பல இனங்களைச்சேர்ந்தவர். ஆனாலும் முற்காலத்தில் பழங்குடிகள்கனடாவில் வாழ்ந்தனர். பிரெஞ்சு நாட்டவரும்ஆங்கிலேயரும் கனடாவுக்குப் புலம்பெயர்ந்துபழங்குடிகளது நிலத்தைப் பறித்து வாழ்ந்து வந்தனர்.

பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும்ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது.

கனடா வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கேவடமுனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கேபசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாகஅமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்டகூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம்,பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.

1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில்இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.

கனடா நாள் என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும்.

1867 ஆம்ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்துபிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டு தோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது

இந்நாள் முன்னர் டொமினியன் நாள் எனஅழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்துபெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

கனடா நாளன்று வானவேடிக்கை, விசேட அணிவகுப்புகள், இசைநிகழ்ச்சிகள், கேளிக்கைகள்போன்றன சிறப்பாக நடைபெறும்.

கனடாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடுவதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும்அடைகிறோம்.

வாழ்க கனடா! வளர்க பல்லின கலாச்சாரம்!

ஆக்கம்: சிறிதேவி சிறிகுமார் (தரம் 10)