Mar 21

நெடுந்தீவு கடற்பகுதியில் 10 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த 10 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் இரவு இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு நேற்று  யாழிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதி மன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள நெடுந்தீவு பகுதியில் இந்திய இழுவை படகுகள் கடற்றொழில் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த  கடற்பகுதியில்  இரண்டு இழுவை படகுகளில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் கடற்படையினரைக் கண்டதும் ஒரு படகு தப்பிச் சென்ற நிலையில் மற்றைய படகும் தப்பிச் செல்ல முற்படும் போது  கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு படகும் அதிலிருந்த 10  மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.