Jun 28

அரசியல் ஒருங்கிணைப்பு அவசியம்: பிரித்தானிய நிதியமைச்சர்

சிறந்த அரசியல் ஒருங்கிணைப்பின்மை, பிரெக்சிற்றை பாதிக்கும் என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடத்தப்பட்ட பொருளாதார உச்சமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “பிரெக்சிற் தொடர்பில் உற்று நோக்கும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை இரு தரப்பிற்கும் நன்மை பயக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். சிறந்த பிரெக்சிற் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்படாதவிடத்து அது இரு தரப்பிற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எனது வருத்தம்” என தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் வாரம் ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் நடத்தப்படவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டின் போது வர்த்தகம் தாராளமயமாக்கப்படுவது குறித்து அக்கறை செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.