Jun 28

காதலில் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பது... குட்டைப் பெண்கள் தானாம்..!

ஓர் ஆணிடம் ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் தான். அதேவேளையில் கோபம், மகிழ்ச்சி, அழுகை, கவலை, பொறாமை, சிரிப்பு, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் அன்பின் வெளிப்பாடுதான். இந்த வெளிப்பாடு இல்லாத காதல் இல்லை; காதலும் இல்லை.

நீங்கள் எப்பொழுதும் உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்திருக்கும் தருணம் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் தருணத்தை அனுபவித்தாலே போதும். இந்த அழகான தருணத்தை அனுபவிப்பதில் குட்டை பெண்களுக்கு ஒரு படி அதிக மகிழ்ச்சிதான். எப்படி தெரியுமா?

பாதுகாப்பான உணர்வு

உயரமாக இருக்கும் காதலர் எப்போதும் தன் குட்டை காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் நினைப்பார். நீங்கள் பிறர் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் காதலரின் கண்களை விட்டு நீங்கள் அகல மாட்டீர்கள். உங்கள் பாதுகாப்பின் மேல் அவருக்கு அதிக அக்கறை. நீங்கள் காணாமல் போய்விட்டால்!

கை கோர்த்து நடக்கலாம்

காதலரின் கை பிடித்து நடக்கும் சந்தோசம் எல்லா நேரத்திலும் கிடைக்காது. அந்த உணர்வு என்பது அனுபவித்தால் மட்டுமே தெரியும். இதற்கும் குட்டைப் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. நீங்கள் குட்டையாக இருப்பதால் நீங்கள் அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பது கொஞ்சம் கஷ்டம். குட்டைக் கால்கள் இல்லையா!

அவர் உங்களின் கைகளை இறுக்கமாக பிடித்து உங்களின் நடைக்கு ஈடு கொடுக்க சற்று மெதுவாக நடப்பார். அல்லது அவருடன் சேர்ந்து நீங்கள் நடக்க வேண்டும் என்றால் உங்களை அவர் வசம் இழுத்துக் கொண்டு நடப்பார். இந்த அன்பான இறுக்கத்தை குட்டை பெண்களே உணர்வார்கள்.

இதமான அரவணைப்பு

நீங்கள் உங்கள் காதலரை மகிழ்சியாகவோ அல்லது ஆறுதலுக்காகவோ கட்டிப் பிடிப்பது மிகவும் சுலபம். நீங்கள் அவரின் மார் உயரம் தான் இருப்பீர்கள். அவரின் இரு கைகளுக்கும் இடையே அவரை அரவணைத்து அவரின் இதயத் துடிப்பை கேட்கும் சந்தோஷம் யாருக்கு கிடைக்கும்? உங்களின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், அழுகையை போக்கும் ஒலி. மௌனத்திலிருந்து பிறக்கும் ஒலி.

அழகான அர்த்தமுள்ள முத்தம்

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. உயரமாக இருக்கும் உங்கள் காதலர் உங்கள் கண்களைப் பார்த்து உங்களுக்காக தன் தலையை குனித்து உங்களுக்கு முத்தம் இடும் தருணம் என்பது குட்டை பெண்கள் மட்டும் அனுபவிக்கும் சந்தோஷம்.

உயரமாக இருக்கும் பெண்களும் இதைத்தானே அனுபவிக்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்கள? அவர் உங்களுக்காக தன் தலையை குனியும் போது, நீங்கள் அவருக்காக உங்கள் நுனிக்காலில் நின்று உங்கள் இருவருக்குமான இடைவெளியை குறைக்கும் அந்த தருணம் என்பது யாருக்கும் கிடைக்காத ஒன்று. இதை அனுவிக்கும் குட்டைப் பெண்களுக்கு மட்டுமே தெரியும்!

உங்களை சுலபமாக தூக்கி விடுவார்

நீங்கள் குட்டையாக சிறியதாக இருப்பதால் உங்களை தூக்கி அணைத்துக் கொள்வதில் அவருக்கு சிரமமே இல்லை. நீங்கள் எங்காவது தூரப் பயணம் சென்று அவரைக் காணாமல் தவித்தீர்களா? அவரை பார்த்வுடனே ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்தீர்களா? இதற்கு குட்டையாக இருக்கும் பெண்கள் எப்படி பிறரைக் காட்டிலும் அதிகம் சந்தோஷப் படுகிறார்கள் தெரியுமா.

அவரை ஓடிசென்று அரவணைக்கும் போது உங்களை சுலபாகத் தூக்கி இறுக்கமாக அரவணைத்துக் கொள்வார். நீண்ட பிரிவிற்குப் பிறகு கிடைக்கும் இந்த இறுக்கமான அரவணைப்பைத் தவிர வேறு என்ன வேண்டும்?

சொல்வதெல்லாம் உண்மையா என்ற கேள்வி பலருக்கு வரும். வர வேண்டும். இதை அனுபவிக்கும் குட்டைப் பெண்களுக்கும் அவர்களின் காதலுருக்கும் மட்டுமே இது உண்மை என்று புரியும்.