Mar 21

வட மாகாண சபையின் பிரேரணை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக   இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமெனக்கோரி அண்மையில் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நேற்று ஐக்கியநாடுகள் மனித  உரிமை பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில்   அதில் கலந்துகொண்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்தப் பிரேரணையை    ஜெனிவா மனித  உரிமை  பேரவையில் சமர்ப்பித்தனர். 

அந்தப் பிரேரணையின்  பிரதியொன்று   ஐக்கியநாடுகளின்  செயலாளர் நாயகம்   அன்டோனியம் கட்டோஸுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.