Jun 28

பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு தலைவராக கனடா பெண் நியமனம்

பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு படைக்கு, முதன்முறையாக, கனடாவைச் சேர்ந்த பெண், தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பாதுகாப்பு படையில், இதுவரை ஆண்கள் மட்டுமே தலைமையேற்று வந்து உள்ளனர்.

அந்நாட்டு ராணுவத்தில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, ஜூலையில் இந்த தடை நீக்கப்பட்டது. அதன்பின், ராணியின் பாதுகாப்புக்கு, கனடா நாட்டு ராணுவ பெண் கேப்டனான, மெகன் கவுட்டோ, 24, தலைமையிலான, படைப் பிரிவு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

ஜூலை, 3ல், மெகன், அரண்மனை பாதுகாப்பு படை தலைவராக பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பிரிட்டனின், 300 ஆண்டு கால வரலாறு தகர்க்கப்படுகிறது.