Mar 21

கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு; அமைச்சர் சுவாமிநாதன்

கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன்   கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாரமுகத்துடன் அரசாங்கம் இருக்கின்றது என்ற தொனிப்பட கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது அமைச்சர் சுவாமிநாதன்,  கேப்பாபுலவு மக்கள் பிரச்சினை தொடர்பாக நான் கடந்த வெள்ளிக்கிழமை சிவமோகன் எம்.பி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்போது கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு காண முடியும்   என்றார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறிதரன் எம்.பி அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருப்பதாகவும் குறிப்பிட்டார்.