Jun 28

பல்லினக் கலாச்சார தேசத்தில் இனங்களிடையே முரண்பாடா? ஸ்காபரோ மத்தி வேட்பாளர் தேர்வு எதைப் புகட்டி நிற்கின்றது?

கனடாவின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் நாட்களில் ஸ்காபரோவில் இருந்து வருகின்ற செய்தி இனிப்பானதல்ல.

இருந்தும், நாங்கள் கனடியர்கள் என்கிற மரபுரிமை வாதத்திலும், ஜனநாயக விழுமியங்களைப் பேணுபவர்கள் என்கிற அறுதியுடனும் “ஆத்திரப்படாமல்”, “அவரசப்படாமல்”, முக்கியமாக “மற்றவர்களை உசுப்பேற்றி விடாமல்” அணுக வேண்டிய விடயமிது.

விடயம் இதுதான். ஸ்காபரோ மத்திய தொகுதிக்கான மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரைத் தேர்வு செய்யும் உள்ளகத் தேர்தல் இடம்பெற்றது.

அங்கு அங்கத்துவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை, நேரமின்மை தவிர்ப்பதற்கான முயற்சிகளேதுமற்ற முறையில் கட்சி அங்கத்துவர்களை கோபமூட்டும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதே இப்போதைய செய்தியாகும்.

இதனால் சுமார் 2800 அங்கத்துவர்களை தனக்கு ஆதரவாகக் கொண்ட தேனுசா பரணியின் ஆதரவு அங்கத்துவர்கள் பலர் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டனர்.  இவர் ரொறன்ரோ “இரா சுப்பர் மார்க்கட்” குடும்பத்தை சார்ந்தவர் (இந்த நிறுவனம் கனடாவிற்கு வடக்கு மாகாண முதல்வர் வந்த போது காத்திரமான பங்களிப்பு, அவரது நிதிசேகரிப்பு கனதியான நிதி வழங்கியதான தகவல் அவர்கள் மக்களின் பக்கமே நிற்பதற்கான சாண்றுகளாகப் மற்றும் கனடாவிற்கான காத்திரமான பங்களிப்புகள் பலவற்றாலும் கனடாவிற்குப் பங்களித்த பலராலும் இன்றும் பெருமையாகப் பகிரப்படுகின்றது.)

விரும்பினாலோ, விருப்பாவிட்டாலோ கட்சியின் தலைமையை இவ்வாறான ஒரு துரதிஸ்ட நடவடிக்கைக்கு முற்று முழுதான பொறுப்பை ஏற்க வேண்டும். சுமார் 4000 அங்கத்துவர்களைக் கொண்ட ஒரு தொகுதியில் 150 பேர் தான் வாக்களிக்க வருவார்கள் என்ற “பொய்யான” தரவுப் பகிர்தலுடன் ரொறன்ரோ மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு சனசமூக நிலையத்தை வாக்களிப்புக்கு தேர்வு செய்ததில் இருந்தே தவறுகள் ஆரம்பித்திருக்கின்றன.

கனடியர்களின் தேசமிது. கனடியர்களிற்கான கட்சிகள் தங்களின் ஆதரவைப் பெருக்கி ஆட்சியை அமைக்க எப்போதுமே, அது இனி 50 ஆண்டுகள் கடந்த பிற்பாடுமே, மொழி வாரியான, மத வாரியான இனங்களின் பிரதிநிதித்துவத்தை, வாக்கைக் கவர என்றுமே முயன்று கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் கனடிய தேசம், தேசியம் என்பன பல்கலாச்சாரத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்டது. எனவே இந்த கனடியத் தேசிய நீரோட்டத் தேர்தலில் போட்டியிட முனைகின்றவர்களை அவர்கள் சார்ந்த மொழி வழியாகப் பார்ப்பதை, மதவழியாகப் பார்ப்பதை விடுத்து அவர்களை கனடியர்களாகப் பார்க்கின்றதொரு மனப்பாண்மையை ஏனைய இனங்களிற்கு ஏற்படுத்த இவ்வாறான தேர்தல்கள் உதவும்.

ஏற்கனவே இரண்டு தமிழர்கள் மாகாண முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இன்னுமிரு தொகுதிகளில் தமிழர்கள் வேட்பாளர்களாக வர முனைகின்றார்கள். இந்த நிலையில் இந்தப் பெண்ணும் வெற்றி பெற்றால் 5 தமிழ் வேட்பாளர்கள் என்ற நிலையேற்படுமா என்கிற பயம் கனடியத் தேசிய நீரோட்டத்தில் இணையாத, அல்லது இணைந்தது போல நடிக்கின்ற சில இனங்குழுமங்களிற்கு இருக்கின்றதா என்ற கேள்வியையே இந்த ஸ்காபரோ மத்தித் தேர்தல் ஏற்படுத்தி நிற்பதாக பலரும் நம்புகின்றார்கள்.

நாங்கள் எல்லோரையும் கனடியர்களாகவே கருதுகின்றோம். என்றுமே கருதுவோம். இருந்தும் தமிழர்களை ஒரு காலத்தில் ஆண்ட, இன்று வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள கிரேக்க இனத்தவர்களின் புலம்பெயர்ந்தவர்களின் “உறுதியின் உறைவிடமாக” இருந்ததாக அவர்கள் நம்பும் ஸ்காபாரோ மத்திய தொகுதியில் ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளராக வருவதற்கான தடைகள் வேண்டுமேன்றே ஏற்படுத்தா என்ற கேள்விக்கான விடை யாதென்றால் இந்த சனசமூக நிலையத்தை அவர்கள் வாக்களிப்பு முடிந்து சில மணித்துணிகளிகளிலே மூடி விடுவார்கள் எனத் தெரிந்தும் தேர்வு செய்தவர்களின் வசமே குற்றம் சென்று வீழ்கின்றது.

இதுவரை இவ்வாறு எங்குமே வாக்களிப்பு இவ்வாறான நேரக் கட்டுபாட்டுடன் மூடப்படும் நிலையத்தில் அனுமதிக்கப்படவில்லை என்போரும், இதைவிடத் தலைசிறந்த பல சமூக பயண்பாட்டு நிலையங்கள், தனியார் மண்டபங்கள் இருந்தாலும் எதற்காக இவ்வாறானதொரு அசௌகரியமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பமே கேள்விக்குரியாகவுள்ளது.

ஒரு இனக் குழுமாக தமிழர்கள் நிறைந்ததொரு அங்கீகாரத்தை பெறும் நிலையிலுள்ள இன்றைய கால கட்டத்தில், தமிழர்கள் எந்த விழாவிற்கும் திரு. பற்றிக் பிறவுனை கௌரவ விருந்தினராக தமிழர்கள் கட்சி பேதமற்று அழைத்து மகிழும் இந்தக் கால கட்டத்தில் இவ்வாறனதொரு நெருக்குதலைக் “தற்செயலாகக் கொடுத்தவர்கள்” திரு. பற்றிக் பிறவுனையே அவமானப்படுத்தி விட்டார்கள்.

அதற்காக கனடிய தேசிய நீரோட்டத்தின் பிரதான பங்காளிகளில் ஒருவரான தமிழர்களும் எதனையுமே ஜனநாயக விழுமியங்களிற்கு புறம்பான வகையில் ஏற்கப்போவதுமில்லை. 4000 அங்கத்துவர்களில் 2800 அங்கத்துவர்களின் ஆதரவை உடையவராக நம்பப்படும் தேனுசா பரணி தேர்தல் நேர்மையாக நடந்தால் வெற்றி பெறுவார் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. ஏற்கனவே அவர் வெற்றி பெற்று வி;ட்டார் என்று நம்பப்பட்டால் கூட….