Mar 21

ஐ.நா. தீர்மானத்திற்கு எவ்வாறு இணை அனுசரணை வழங்க முடியும் ; தினேஷ் கேள்வி

.நா.மனித உரிமை பேரவையில் நட்டின் அரசிலமைப்புக்கு முரணாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர் இணை அனுசரணை வழங்கும் உறுதிமொழியை வழங்குவாரா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு  பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன  பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை நிலையியற்கட்டளை 23 இன் 2 கீழ் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட பிரேரணையின் ஊடாக எமது இராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறான தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்குவதற்கு ஒற்றையாட்சி பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும்.

அத்துடன் சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் வெளிவிவகார அமைச்சர் எடுத்து  வரும் நடவடிக்கை கண்டிக்கதக்கது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு வந்து விசாரணை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவீர்களா?

கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் நிறுவுவீர்களா? என்பதற்கு பதில் வழங்க வேண்டும். அரசியலமைப்பு முரணான ஒப்பந்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எப்படி கைச்சாத்திடுவார் என கேள்வி எழுப்பினார்