Mar 21

சர்வதேச நீதிபதிகளை கண்காணிப்பாளர்களாக ஏற்கலாம்; பிரதமர்

முன்னைய ஆட்சியின் போது இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

குறித்த கடிதங்களை சபைக்கு முன்வைக்கின்றேன். தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு  முகங்கொடுப்பதற்கு கூட்டு எதிரணியின் இணை தலைவர் ஜீ.எல் பீரிஸ் செய்த முறைப்பாடே பிரதான காரணமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டினார்.

 சர்வதேச நீதிபதிகள் இலங்கை நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது. கலப்பு நிதிமன்றத்திற்கு இடமளிக்க முடியாது. யுத்தவிசாரணை நீதிமன்றங்களையும் ஸ்தாபிக்கப் போவதில்லை.

எனினும் உள்ளக விசாரணையை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியும் என்பதை இந்த சபையில் பொறுப்புடன் கூறுகின்றேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்