Jun 28

பல சர்ச்சைகளை கடந்து டி20யில் இரண்டாமிடம் பிடித்த பும்ரா : கோலி முதலிடம்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா டி20 கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சாம்பியன்ஸ்லீக் கிரிக்கெட் தொடருக்கு பின் பும்ராவை பல மாநில போக்குவரத்து காவல்துறையினர், பும்ரா இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வீசிய நோ-பாலை வைத்து விளம்பரம் செய்தனர்.

இதையடுத்து கடுப்பான பும்ரா அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இப்படி பும்ரா விஷயம் மிக காரசாரமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ஐசிசி வெளியிட்டிருக்கும் பவுலர்களுக்கான டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பும்ரா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்திலிருந்து தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் வாசிம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களில் கோலி தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.