Mar 21

கொட்டாஞ்சேனையில் ஆவா குழு; இருவர் கைது

யாழ். குடாநாட்டை அச்சுறுத்தி வந்த ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் மறைந்திருந்த போது, விஷேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று தெஹிவளையில் வைத்து பிரதான ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது  செய்யப்ப்ட்ட நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமையவே,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த சிறப்பு பொலிஸ் குழுவினர் கொட்டாஞ்சேனையில் வைத்து குறித்த இருவரையும் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

கைதான இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விஷேட விசாரணைகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த  கைக்குண்டு ஒன்றும், வாள்கள் மூன்றும் ஒரு கோடாரியும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.