Jun 27

ஸ்கொட்லாந்திலிருந்து புறப்பட்டது எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல்

பிரித்தானிய றோயல் கடற்படைக்கென உருவாக்கப்பட்ட எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக்  கப்பல், ஸ்கொட்லாந்தின் Rosyth பகுதியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கடற்பயணம் குறித்த சோதனையை நடத்தும் பொருட்டே மேற்படி விமானந்தாங்கிக் கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளாக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 65,000 தொன்கள் எடை கொண்ட குறித்த விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்க, 6 பில்லியன் பவுண்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்தமையின் பின்னர் இந்த கப்பலில் சுமார் 1000 கடற்படை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் சுமார் 40 விமானங்களை இந்தக் கப்பல் சுமக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.