Mar 21

லசந்த,உபாலி,கீத் ஆகிய சம்பவங்களில் ஒரே குழு; குற்றப்புலனாய்வு அதிர்ச்சித்தகவல்

லசந்த விக்ரமதுங்க, உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகிய சம்பவங்களில் ஒரே குழுவினரே ஈடுபட்டுள்ளது.

குற்றப்புலனாய்வாளர்கள் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,

2009.01.8 ஆம் திகதி லசந்த கொலை செய்யப்பட்ட தினம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டு லசந்தவின் வீடு முதல் கொலை இடம்பெற்ற இடம்வரை  லசந்தவை பின் தொடர்ந்துள்ளமை தொழில்நுட்ப சாட்சிகள் ஊடாக உறுதியாகிறது.

இதே தொலைபேசி இலக்கங்களே 2009.01.06 ஆம் திகதி ஊடகவியலாளர் உபாலி தென்னகோனின் வீட்டுப் பகுதியிலும் சஞ்சரித்துள்ள.

லசந்த விக்ரமதுங்க, உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் மீதான க்குதல்கள் தொடர்பில் பார்க்கும் போது அவை அனைத்தும் ஒரே வடிவமைப்பைக் கொண்டுள்ள.

இதுவரை முன்னெடுத்த விசாரணைகளின் தடயங்களின் பிரகாரம் இவை மூன்றையும் ஒரே குழுவே செய்திருக்க வேண்டும் என நாம் பலமாக நம்புகிறோம்.

குறிப்பாக கீத் நொயார் க்குதல் விவகாரத்தில் நாம் கைது செய்துள்ள 5 இராணுவ உளவுத்துறையினருக்கும் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புள்ளது.

இது தொடர்பில் எமக்கு சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் இது தொடர்பில் மேலதிக சான்றுகளை வெளிப்படுத்த தொடர்ந்து விசாரணை  செய்கிறோம் என்றனர்.