Jun 27

பில்லியன் டொலர்களில் கனடாவுக்கு நீர்மூழ்கிப் படை!

கனடாவுக்கான நீர்மூழ்கிக் கப்பல் தொகுதியினை மேம்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுவதற்கு கனேடிய மத்திய அரசர்ஙகம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை கனேடிய அரச கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் றொன் லோய்ட் தற்காத்து கருத்து வெளியிட்டுள்ளார்.

கனேடிய நீர்ப்பரப்பினுள், அல்லது நேட்டோ அங்கத்துவ நாடுகளின் கடற்பரப்பினுள் ஏனைய கடல்வழி ஊடுருவல்கள் இடம்பெறுவதை மிக இலகுவாக இனங்காண்பதில் இவ்வாறான நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும்பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏனைய கடற்கலங்களை விரைவில் இனங்கண்டுவிட முடியும் எனவும், அது எதிரிப் படைகளிடம் இருந்து கனடாவையும் ஏனைய நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகள் எவையாவது கனேடிய கடற்பரப்பினுள் அத்துமீறி நுளைய முயற்சித்துள்ளனவா என்ற விபரங்கள் எதனையும் வெளியிடாத அவர், நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் ஏனைய ஆயுதங்களைத் தயாரிப்பதனை காட்டிலும் விரைவாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து வருவதாகவும், அதிகரித்துவரும் பிராந்தியங்களுக்கு இடையேயான பதற்றநிலையினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இவ்வாறான நீர்மூழ்கிகளின் தேவை உணரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.